ரிஷப் பன்ட்... 2018 ஐபிஎல்லின் ஸ்டைலிஷ் வீரர்! #IPL2018



ந்தாண்டு ஐபிஎல் தொடரில், பல இளம் வீரர்கள் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளனர். குறிப்பாக ரிஷப் பன்ட், அதிரடியாக விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்தார். 

Sponsored


இரண்டாண்டுகள் தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ், கெத்தாக கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் ஆகியுள்ளது. இந்த வெற்றியை சென்னை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இன்றுடன் இந்தத் தொடர் முடிந்தாலும்,  தொடர் முழுக்க பல்வேறு சாதனைகளையும், நினைவுகளையும் வீரர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இறுதிப்போட்டி முடிந்த பின்னர் நடந்த ஐபிஎல் விருது வழங்கும் நிகழ்ச்சியில், பல விருதுகள் வழங்கப்பட்டன. 

Sponsored


சிறந்த மைதான பராமரிப்புக்கான விருதை கொல்கத்தா (7 -க்கும் அதிகமான போட்டிகள்) மற்றும் பஞ்சாப் (7 -க்கும் குறைவான போட்டிகள்) மைதானங்கள் வென்றன. 

Sponsored


வளர்ந்துவரும் இளம் வீரருக்கான விருதை டெல்லி அணியின் ரிஷப் பன்ட் பெற்றார். 

சிறந்த கேட்சுக்கான விருதை டெல்லி அணியின் ட்ரண்ட் போல்ட் பெற்றார். அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் இந்த விருதை பெற்றுக்கொண்டார். 

இந்தத் தொடரில், சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரராக கொல்கத்தா அணியின் சுனில் நரைன் தேர்வுசெய்யப்பட்டார். ஸ்டைலிஷ் வீரராக டெல்லியின் பன்ட் தேர்வானார். 

இந்தத் தொடரில், ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற என்ற சாதனையை டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். இவர் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்தார்.  

இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பன்ட் அதிகபட்சமாக 128 ரன்கள் குவித்தார். அதேபோன்று,அதிக சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் விளாசிய வீரரும் அவர்தான். இந்தத் தொடரில்,14 போட்டியில் விளையாடிய அவர், 37 சிக்சர்களும் 68 பவுண்டரிகளும் விளாசியுள்ளார். 
இந்தத் தொடரில் அதிக அரை சதம் அடித்தவர், வில்லியம்சன் (8). அதிக சதம் அடித்த வீரர் சென்னையின் வாட்சன் (2).  

இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்து, ஊதா நிற தொப்பியைக் கைப்பற்றும் வாய்ப்பு மாறி மாறி வந்தாலும், இறுதியில் பஞ்சாப் அணியின் டை 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஊதா நிற தொப்பியைக் கைப்பற்றினார். 

இந்தத் தொடரில், அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்ச் தொப்பியை வென்றார், ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன். அவர், இந்தத் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 735 ரன்கள் எடுத்தார். அதிகபட்ச ரன் 84. 

ஐபிஎல் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு ரூபாய் 12.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதை அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் பெற்றுக்கொண்டார். ஐபிஎல் 2018 -ன் சாம்பியனான சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதனை சென்னை அணி சார்பாக தோனி பெற்றுக்கொண்டார். 



Trending Articles

Sponsored