"கோவையில் அம்மா யோகா மையத்துக்கு பூட்டு! மோடிக்கு பறந்த புகார்



Sponsored



"சர்வதேச யோக தினமான இன்று, கோவையில் உள்ள அம்மா யோகா மையத்துக்கு அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் பூட்டுப்போட்டு எவரையும் யோகா செய்யவிடாமல் தடுத்திருப்பது, கோவை பி.ஜே.பி-யினரை கொதிப்படைய வைத்திருக்கிறது.  யோகா மையத்தைத் திறக்காமல் நகர மாட்டோம் என்று பி.ஜே.பி-யினர் போராட்டம் நடத்திவருவதால், 'அம்மா யோகா மையம்' அமைந்துள்ள பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பதற்றம் சூழ்ந்திருக்கிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு, யோகாவின்  முக்கியத்துவம்குறித்து விளக்கப்பட்டுவருகிறது.  இந்நிலையில், கோவை ஈச்சனாரியை அடுத்துள்ள கணேசபுரத்தில் அமைந்துள்ள அம்மா யோகா மையத்தை  அந்தப் பகுதியின் முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் வேணுகோபால் பூட்டிவிட்டார். இதனால், இந்தியாவின் அடையாளமான யோகாவை அவமதித்ததுடன் பொதுமக்களை யோகா செய்யவிடாமல் தடுத்துவிட்டார் என இன்று காலையிலிருந்து அம்மா யோகா மையத்தின் முன் பி.ஜே.பி-யினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

Sponsored


இதுகுறித்துப் பேசிய பி.ஜே.பி தலைவர் எஸ்.ஆர்.சேகர், "சர்வதேச யோகா தினமான இன்று, மக்கள் வரிப் பணத்தில் அரசால் கட்டப்பட்ட யோகா மையத்துக்கு அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் பூட்டுப்போடுகிறார் என்றால், அதன் பின்னணியில் சில்லரைத்தனமான அரசியல் இருக்கிறது. உள்ளூர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்லித்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள். இந்தியாவின் பெருமையான யோகாவை அவமதித்ததற்கு தமிழ அரசு துணைபோகிறதா? என்பதுதான் என்னுடைய கேள்வி. இதுகுறித்து பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் புகார் அனுப்பியுள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்'' என்றார்.

Sponsored




Trending Articles

Sponsored