`பெரியாரிடம் இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினிடம் இல்லை!’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்`பெரியார் கூட குன்றக்குடி அடிகளார் திருநீறு அணிவித்தபோது, அதை அழிக்கவில்லை. தெய்வ நம்பிக்கை அற்றவருக்கு இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினுக்கு இல்லை’ என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

Sponsored


மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு இருக்கும்போது, பலர் நாங்கள் கொண்டு வந்ததாக சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதன்மூலம் 13 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். ஶ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்டாலின் சென்று பரிகார பூஜை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேற்கு வாசல் வழியாக சென்று ரங்கநாதருக்கு சார்த்தப்பட்ட மாலை அவருக்கு சூட்டப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு பிரசாதனம் நெற்றியில் போட்டபோது, அதை அவர் அழித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. யாரையோ நம்ப வைக்க வேடம் போடுவோரை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. அந்தப் பட்டியலில் ஸ்டாலின் சேர்ந்துள்ளார். சமய சின்னத்தை அணிவித்த பூஜாரிகள் ஸ்டாலினுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன.

Sponsored


பெரியார் கூட குன்றக்குடி அடிகளார் திருநீறு அணிவித்தபோது, அதை அழிக்கவில்லை. தெய்வ நம்பிக்கை அற்றவருக்கு இருந்த நம்பிக்கை கூட ஸ்டாலினுக்கு இல்லை. எனவே, அவரை கோயிலுக்குள்ளோ மற்ற வழிபாட்டுத் தலங்களிலோ அனுமதிக்கக் கூடாது. இதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போது சாமிக்கு பரிகார பூஜை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆகம விதிகள் மீறப்படவில்லை எனக் கூறுவது தவறு. எந்த வழிபாட்டுத் தலத்திலும் இவர்களைப் போன்றவர்களை அனுமதிக்கக் கூடாது. அவர் கோயிலுக்குச் செல்வதற்கு முந்தைய நாள் நடந்த சிறுபான்மை கூட்டத்துக்குப் பிறகு பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த அவர், கோயிலுக்குச் சென்றிருக்கலாம்.

Sponsored


ஆஷ்துரை படுகொலையை கண்டித்தும், ஆஷ்துரைக்கு வீரவணக்கம் என்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் செய்த சம்பவங்களுக்கு தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதுள்ள நிலையே நீடித்தால் காமராஜர், தேவர், அம்பேத்கர், காந்தி போன்றவர்களின் சிலைகள் இடிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். ஜெயலலிதா ஆட்சி முதலே நாங்கள் எச்சரிக்கை கொடுத்து வருகிறோம். அப்போது பயத்துடன் காணப்பட்ட நக்சலைட்டுகள் தற்போது பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலே பயங்கரவாதிகள் தமிழகத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். நக்சலைட்டுகள் தெருவில் வந்து தீவிரவாத போராட்டம் நடத்தினால் நாங்கள் அவர்கள் வீடுகளுக்குச் சென்று போராடுவோம். எட்டு வழிச் சாலை மக்களுக்கு நன்மை பயக்கும். தமிழ் தீவிரவாதிகள் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் அனைவரும் இணைந்து நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். நக்சலைட்டுகள் ஆட்சி அமைப்போம் என பகிரங்கமாக பேசி வருகின்றனர்" என்றார்.Trending Articles

Sponsored