இலங்கைக்கு கள்ளத்தனமாகச் செல்ல முயன்ற அகதிப் பெண் உட்பட 3 பேர் கைது!Sponsoredமண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தனமாக செல்ல முயன்ற ஒரு பெண் உட்பட 3 பேரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இலங்கையிலிருந்து சாஸ்திரி-சிர்மாவோ ஒப்பந்தப்படி வெளியேற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும், இனக்கலவரத்தாலும், இலங்கை ராணுவத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களும் அகதிகளாக வந்தபோது இங்குள்ள மறுவாழ்வு முகாமில் பதிவு செய்யப்பட்டு பின்னர் தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இலங்கை அகதிகள் வருகை முற்றிலும் நின்ற நிலையில் தற்போது இந்த முகாமில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
 

Sponsored


இந்நிலையில், உரிய அனுமதியுடன் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் அதற்கென அதிக தொகை செலவழிக்கும் நிலை உள்ளது. இதனால் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பினாலும் பெரும்பாலான தமிழர்களால் அவ்வாறு செல்ல முடிவதில்லை. இதனால் சிலர் கள்ளத்தனமாக இலங்கைக்கு படகு மூலம் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டபம் முகாமில் வசித்து வரும் நிஷாந்தன், நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி முகாமில் வசித்து வரும் ராஜன், அவரின் மனைவி ரூபா ஆகியோர் மண்டபம் அய்யனார் கோயில் கடற்கரைப் பகுதியிலிருந்து நேற்று இரவு இலங்கைக்கு படகில் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதை அறிந்த க்யூ பிரிவு போலீஸார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நிஷாந்தன் மற்றும் ராஜன் மீது திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், இந்த வழக்குகளில் இருந்து தப்பி செல்லவே இலங்கைக்குச் செல்ல முயன்று போலீஸாரிடம் சிக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored