தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது!Sponsoredராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி வந்ததாகக் கூறி, 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கைக் கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு அத்துமீறி மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்தியப் படகு ஒன்றைக் கண்டனர். உடனடியாக அந்தப் படகைத் தடுத்துநிறுத்திய இலங்கைக் கடற்படையினர் சோதனை மேற்கொண்டபோது, படகினுள் 37 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். 
இதையடுத்து, அந்தப் படகில் இருந்த தொண்டியைச் சேர்ந்த மணி, பொன்னையா, சிந்தாதுரை, ஆண்டனி ராஜேஸ்வரன் ஆகிய 4 பேரையும் கைதுசெய்த கடற்படையினர், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுசென்றனர்.விசாரணைக்குப் பின்னர் மீனவர்கள் நால்வரும் காங்கேசன்துறை போலீஸாரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Sponsored


ஏற்கெனவே,  பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தியவர்கள் 19 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.  சர்வதேச மன்னிப்பு சபை, மரண தண்டனை நிறைவேற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளபோதும், அதை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது. இந்நிலையில், தற்போது இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored