`இந்தியா கோயில் என்றால், தமிழ்நாடுதான் கருவறை' - எடப்பாடி பழனிசாமி!Sponsoredமகான்களை தோற்றுவிக்கும் ஞான பூமியாகத் தமிழ்நாடு விளங்குகிறது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 

ஜெயின் சமூகத்தின் 9 வது மதகுருவான ஆச்சார்யா மஹாஸ்ரமண் நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதையொட்டி சதூர்மாஸ் எனப்படும் ஜெயின் சமூகத்தினருக்கு உபதேசம் வழங்கும் விழா சென்னை மாதவரத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர் பெஞ்சமினும் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய எடப்பாடி, ``இந்தியா திருக்கோயில் என்றால் அதில் இறைவன் உறைந்திருக்கும் கருவறைதான் தமிழ்நாடு. 

Sponsored


மகான்களைத் தோற்றுவிக்கும் ஞான பூமியாகத் தமிழ்நாடு விளங்குகிறது. பக்தியும் அறமும் தழைத்து விளங்கும் புண்ணியபூமி தமிழகம். பல்வேறு இடங்களிலிருந்து ஞானிகளும் குருமார்களும் ஆன்மிகத் தேடலுக்காகவும் அமைதிக்காகவும் தமிழகத்துக்கு வருவது தொன்றுதொட்டு வருவது சிறப்பு ஆகும். தமிழகத்தில் இறைபக்தி அதிகமாக இருப்பதால் வெளிநாட்டினர் அதிகளவில் இங்கு வருகின்றனர். தமிழகம் வெளிநாட்டவருக்கு சரணாலயமாக இருக்கிறது. நல்லெண்ணம், தீங்கு, கொல்லாமை உள்ளிட்டவற்றைத்தான் சமயங்கள் பரப்புகின்றன" என்று பேசினார்.

Sponsored
Trending Articles

Sponsored