`எளிமையான வாழ்க்கை வாழுங்கள்!’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்Sponsoredதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதினொன்றாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித், தமிழில் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகால் சோழன் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், லோக் அதாலத் தலைவர் நீதியரசர் வள்ளிநாயகம், தமிழ் ஆட்சிமொழி தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திடீரென தமிழில் பேசி அனைவரையும் கலகலப்பாக்கினார். ``எளிமையான வாழ்க்கை வாழுங்கள். அது உங்கள் புகழை உயர்த்திவிடும். இது எனது செய்தி. தமிழ் இனிமையான மொழி. எனவே, நான் தமிழை விரும்புகிறேன்” எனப் பேசியதும் சிறப்பு விருந்தினர்கள் உட்பட அனைவரும் சிரித்துக்கொண்டே ரசித்தனர். அப்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த மாணவர்களில் ஒருவர், ``இவர் தமிழ்ல பேசினது சந்தோஷம். ஆனால், எளிமையான வாழ்க்கை வாழுங்கள்னு இவர் சொல்றதை தான் ஏத்துக்க முடியலை” எனக் கமென்ட் அடித்தார்.  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored