ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை! முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்! Sponsored
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா “ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாலித்தின் பைகள் மற்றும் இதர பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பது மட்டுமன்றி சுகாராத சீர்கேடு ஏற்படுகிறது. ஆகையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருமுறை உபயோகப்படுத்தித் தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.


ஒருமுறை உபயோகப்படுத்தும் பொருட்களை 15.08.2018க்கு பிறகு விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி பகுதிகளில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது. தனியார் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து கண்காணித்து பிளாஸ்டிக் அற்ற நிலையை உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், சணல் பைகள் மற்றும் காகித பைகளை
பயன்படுத்த அறிவுரை வழங்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், மருத்துவமனை, மதுக்கடைகள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மேலும் ‘இந்த அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று அறிவிப்பு செய்ய வேண்டும். கோயில்கள், நீர்நிலைகள், வணிகப்பகுதிகள் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored