தெ.புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு!!Sponsoredதெ.புதுக்கோட்டை பகுதியில்  உள்ள வைகை ஆற்றில் தமிழக அரசு மணல் குவாரி அமைப்பதை கண்டித்து  ஜூலை24 ல் கடைஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக  விவசாயிகள். அறிவித்துள்ளனர்.     

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை, செய்களத்தூர்,வாகுடி ஆகிய கிராமத்திற்குட்பட்ட வைகைஆற்றில் மணல் அள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது முதல் கட்டமாக இதில் தெ.புதுக்கோட்டை பகுதியில் மணல் அள்ள டெண்டர்  விடப்பட்டு மணல் அள்ளுவதற்கான அடிப்படை பணிகள்   நடந்துகொண்டிருக்கிறன.  தெ.புதுக்கோட்டை பகுதி விவசாயிகள்  பேசும் போது "மானாமதுரை பகுதி வைகை ஆற்றிலிருந்து 72 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இங்கிருந்து ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது ராஜகம்பீரம் அருகே வைகைஆற்றிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு மானாமதுரை நகருக்கு விநியோகம் ஆகி கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மானாமதுரைக்கு, விநியோகம் ஆகிற குடிதண்ணீர் நீர்வளம் படுபாதளத்திற்கு சென்றுவிட்டதால்,  மானாமதுரை நகர் மக்களுக்கு குடிதண்ணீர் விநியோக  நேரம் குறைந்துவிட்டது. இதே போன்றுதான் கடலாடி கூட்டுக்குடிநீர் திட்டமும் நீர் ஆதாரம் குறைந்திருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் இருக்கிற மண் வளத்தை அள்ள அரசு அனுமதி கொடுத்துள்ளனர்.

Sponsoredதெ.புதுக்கோட்டை அருகே வைகை ஆற்றில் பி.ஆலங்குளம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் தெ.புதுக்கோட்டை, சின்னபுதுக்கோட்டை, முட்டைக்குறிச்சி, கோச்சடை, கணையனேந்தல், ஆலம்பச்சேரி, கோவானூர், மேலநெட்டூர் ஒரு பகுதி, ஆலங்குளம், நல்லாண்டிபுரம், தெற்குசந்தனூர், எஸ்.காரைக்குடி, வடக்கு சந்தனூர், அரியனூர், வண்ணான்ணோடை, செய்யாங்கோட்டை, புனவனேந்தல், ஆகிய கிராமங்களுக்கான குடி தண்ணீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. இதே போன்று 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட தெ.புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் பத்தாயிரம் லிட்டர் தண்ணீர்கூட நிரம்புவதில்லையென அக்கிராம மக்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள்.இந்த நிலையில் தமிழக அரசு மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கியிருப்பதை ரத்து செய்யும் வரை நாங்கள் போராடுவோம்' என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

Sponsored
Trending Articles

Sponsored