வரலாற்று ஆய்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் !Sponsoredமதுரை காந்திமியூசியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வரலாற்று சிற்பங்களை பற்றி ஆய்வு மேற்கொண்டனர் .

நாட்டின் கலாச்சார முக்கியத்துவம், பழம் பெருமையும் வாய்ந்த இடங்களைப்பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் செயல்படுகின்றன. அதன் செயல்பாட்டில் மதுரை பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 23 மாணவிகள் மற்றும் மதுரை செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து 53 மாணவர்கள் மதுரை காந்தி மியூசியத்திற்கு வருகை தந்தனர். இவர்களுக்கு, தொன்மைகள் பாதுகாப்பு மன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் மேலூர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி ஆசிரியருமான சூரியகுமார் ,  மதுரை காந்தி மியூசியத்தின் வரலாற்றையும் அங்கு உள்ள சிற்பங்களின் பெருமையையும் எடுத்துரைத்தார். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இந்த களப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில்" பள்ளி புத்தகங்களை மட்டும் மனப்பாடம் செய்து படிக்கும் எங்களுக்கு வரலாற்று தேடுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது . நாங்கள் ரசித்தை , கவனித்த விசயங்களை வகுப்பறைக்கு சென்று கலந்துரையாடல் செய்வோம் அதனால் எங்களுக்கு புதுவிதமான அனுபவங்கள் கிடைப்பதாக தெரிவித்தனர் . ஆசிரியர் சூரியகுமார் கூறுகையில் "மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே களப்பணியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது அவர்களின் கல்வி திறன் மேம்படும். படித்து படித்து சோர்வடைந்த மாணவர்கள் இவ்வாறு பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று வரும் போது மூளை புத்துணர்ச்சி அடையும்'' என்று தெரிவித்தார் .

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored