சென்னை தனியார் மருத்துவமனை கட்டட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி!Sponsoredசென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சென்னை கந்தன்சாவடியில் புதிதாக தனியார் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமானப் பணிகள் காலையிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வந்தன. கட்டடத்தின் 4 வது மாடியில் ஜெனரேட்டர் வைப்பதற்கான பணிகளில் தொழிலாளர்கள் சுமார் 40 பேர் காலை முதல் ஈடுபட்டு வந்தனர். அப்போது, மாலை 6.30 மணியளவில் திடீரென கட்டிடத்தின் தூண் மற்றும் சாரம் ஆகியவை பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தன. அந்தக் கட்டடத்தில், இரும்புப் பொருள்கள் மற்றும் சிமென்ட் கலவைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 35 பேர் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர்.

Sponsored


Sponsored


அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்புபணிகளில் 6 தீயணைப்பு வாகனங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், 8 ஆம்புலன்ஸ்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 60 பேர் ஈடுபட்டுள்ளனர். அதே போல மாநில பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 90 பேர் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.Trending Articles

Sponsored