ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இன்ஜினீயரிங் கவுன்சலிங்- கால அட்டவணை வெளியீடு!Sponsoredபொறியியல் படிப்பில் சேர்வதற்கான இன்ஜினீயரிங் கவுன்சலிங்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 

மருத்துவக் கலந்தாய்வுக்கு பின்பே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பதற்காகக் கலந்தாய்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது அண்ணா பல்கலைக்கழகம். மருத்துவப்படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், ஜூலை 25-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை  ஐந்து சுற்றுகளாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 

Sponsored


Sponsored


பொறியியல் படிப்பில் சேரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது. முதல் சுற்றில், தரவரிசையில் கட் ஆஃப் மதிப்பெண் 190 வரை பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.  முதல்சுற்றில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான கட்டணத்தை 24-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பொறியியல் சேர விருப்பமுள்ள கல்லூரியையும், பாடப்பிரிவையும் ஆன்லைன் வழியில் தேர்வு செய்ய மூன்று நாட்கள் (25-ம் தேதி முதல் 27-ம் தேதி மாலை ஐந்து மணிக்குள்) வழங்கப்படுகிறது. நான்காவது நாள் (28.07.2018) காலையில் கணினி வழியே தேர்வான கல்லூரி மற்றும் படிப்பின் பெயர் அறிவிக்கப்படும். அதனை முடிவு செய்ய இரண்டு நாட்கள் வழங்கப்படுகிறது. கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை கடிதத்தை (30.07.2018) பெற்றுக்கொள்ளலாம். 

இதை போலவே, கட் ஆஃப் மதிப்பெண் 175 வரை உள்ளவர்களுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரையும், 150 கட் ஆஃப் மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 வரை உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 13 தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 க்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் https://www.annauniv.edu/ இணையதளத்திலும், https://www.tnea.ac.in/appround/ChoiceApp/login.php இணையதளத்திலும்  பார்த்து தெரிந்துகொள்ளலாம்.Trending Articles

Sponsored