`மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் 8 வழிச்சாலையை பூட்டுப் போட்டு பூட்டிவிடலாம்!’ - அமைச்சர் உதயகுமார் சர்ச்சைப் பேச்சுSponsoredஎட்டு வழிச்சாலைக்கு எதிராகத் தங்கள் விவசாய நிலங்கள், வீடுகள் பறிபோகிறதே என்று மக்கள் போராட்டம் நடத்தி வருவதை பகடி செய்வதுபோலவும், அரசின் திட்டத்தை பற்றி அலட்சியமான பார்வையுடனும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் வந்ததற்கு, அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்குப் பாராட்டு தெரிவித்து நேற்று நடந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,''முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் சென்னை முதல் சேலம் வரை போடப்படும் 8 வழிச்சாலைத் திட்டத்தை சில விஷமிகள் எதிர்க்கின்றனர். திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், 8 வழிச்சாலைக்கு பூட்டு போட்டு பூட்டிவிடலாம்" என்று பேசினார்.

Sponsored


Sponsored


அவர் இப்படி பேசியது போராடும் மக்களின் கோரிக்கையை பகடி செய்வது போல் உள்ளது என்று  மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு உதவியுடன் தமிழக அரசின் திட்டத்தை செயல்படுத்திய பிறகு பூட்டு போட்டுவிடுவோம் என்று கூறியிருப்பது, அரசின் திட்டத்தை அதில் அங்கம் வகிக்கும் அமைச்சரே அலட்சியமாக பேசியிருப்பது மோசமானது என்ற சர்ச்சை கட்சியினருக்குள் ஏற்பட்டுள்ளது.Trending Articles

Sponsored