”தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு இடம் இல்லை” - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்!Sponsored”மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி அ.தி.மு.க., வெற்றி பெற்றதோ அதே வெற்றியை வரும் தேர்தலிலும் பெறும். வரும் தேர்தலில் மத்திய அரசினை நிர்ணயிக்கும் மாற்றுச்சக்தியாக அ.தி.மு.க.,தான் வரும். இனி தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை.” எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்காலத்திற்கு முன்பாகவே, 22 கண்மாய்கள்  ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு, அதிலுள்ள வண்டல்மண் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அளிக்கப்படும்.  தற்போது தமிழக அரசின் நடவடிக்கையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கடைக்கோடி நீர்நிலைகள் வரையிலும் தண்ணீர்  கிடைக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sponsored


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது எப்படி வெற்றி பெற்றதோ அதே வெற்றியை இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பெறும். வரும் தேர்தலில் மத்திய அரசினை நிர்ணயிக்கும் மாற்று சக்தியாக  அ.தி.மு.க.,தான் வரும். இனி தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக்  கூடுதல் மதிப்பெண் அளிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை குறித்து முதல்வர் சட்ட அமைச்சர், அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார்.

Sponsored


மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில்  ஸ்நாக்ஸ், வாகன நிறுத்தக் கட்டணம் ஆகியவற்றில் அதிகமாக வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் பரிந்துரையில் உள்ளது.  இதுகுறித்து தியேட்டர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த அனைத்துச் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு எடுக்கப்படும்.

பா.ஜ.க,வின் அமைச்சரவையில் பங்குபெற்ற தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அது ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை அல்ல. அதனால்தான் நாம் தெலுங்கு தேசம் கட்சிக்கு  ஆதரவு அளிக்கவில்லை. சேலம் - சென்னை 8 வழிச்சாலை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறைவேற்றிட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது” என்றார்.Trending Articles

Sponsored