தகுதி நீக்க வழக்கு - 5 நாள் விசாரணையை இன்று தொடங்குகிறார் 3 -வது நீதிபதி!



தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் மூன்றாவது நீதிபதி இன்று தன் விசாரணையைத் தொடங்குகிறார். 

Sponsored


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் மாறுப்பட்ட தீர்ப்பு அளித்தனர். இதனால் வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.   இந்த வழக்கில் நீதிபதி விமலா மூன்றாவது நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். ஆனால், தினகரன் தரப்பு, நீதிபதி விமலா மீது புகார் தெரிவித்ததோடு  உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிடக் கோரியது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் நீதிபதியாக விமலாவுக்குப் பதில் நீதிபதி சத்தியநாராயணனை பரிந்துரைத்தது. 

Sponsored


இந்நிலையில், நீதிபதி சத்தியநாராயணன், இன்று தனது விசாரணையைத் துவங்குகிறார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 5 நாள்கள் விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு வெளியாகலாம் எனவும் தெரிகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தொடர்ந்து 5 நாள்கள் விசாரணை நடைபெறவுள்ளதால், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Sponsored




Trending Articles

Sponsored