காய்கறிகளுடன் கேரளாவுக்குச் சென்ற தமிழக லாரி மீது சரமாரி தாக்குதல்! கிளீனர் உயிரிழப்புSponsoredகோவையில் இருந்து, கேரளாவுக்குச் சென்ற லாரி மீது நடத்தப்பட்டத் தாக்குதலில், அந்த லாரியின் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதில் சில சரக்கு லாரிகள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து, கொச்சின் அருகே உள்ள செங்கனூர் மார்கெட்டுக்கு, நேற்று இரவு காய்கறிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது.

Sponsored


கடந்த சில நாள்களாகவே, தமிழகத்திலிருந்து கேரளா வரும் லாரிகளை, வாளையாறு சோதனைச் சாவடியில் வைத்து, போராட்டக்காரர்கள்  சிறைப்பிடித்துவந்தனர். இதனிடையே, கோவையில் இருந்து புறப்பட்ட அந்த லாரி கஞ்சிக்கோடு அருகே வந்தபோது, திங்கள் கிழமை அதிகாலை போராட்டக்காரர்கள் லாரியை நிறுத்தச் சொல்லியுள்ளனர். ஆனால், அவர்களின் பேச்சைக் கேட்காமல் லாரி சென்றதாக கூறப்படுகிறது.

Sponsored


இதையடுத்து, அந்த லாரியின் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இதில், லாரியின் கிளீனிர் பாஷா என்றழைக்கப்படும் விஜய் (19) பலத்த காயமடைந்துள்ளார். அவரை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.

லாரியின் டிரைவர் நூருல்லா பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த பாஷா, அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தச் சம்பவம் குறித்து பாலக்காடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.Trending Articles

Sponsored