லாரி ஸ்டிரைக்கால் சேலத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம்! - லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்



பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். மூன்றாவது நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பல கோடி மதிப்புடைய சரக்குகள் அங்காங்கே தேக்கம் அடைந்துள்ளன. நான்காவது நாளான இன்று போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் நிர்வாகக் குழு உறுப்பினரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான சென்னகேசவன் கூறுகையில்,  ``எங்களுடைய நியாயமான போராட்டத்தை அரசு செவி சாய்த்துக் கேட்க வேண்டும். எங்கள் அகில இந்திய சங்கத்தின் மூலம் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், தோல்வியில் முடிந்துள்ளது. நான்காவது நாளாக நீடிக்கும் இந்தப் போராட்டத்தால் இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழ்நாட்டில் 4.5 லட்சம் லாரிகளும், சேலம் மாவட்டத்தில் 33,000 லாரிகளும் ஓடவில்லை.

Sponsored


இதனால் இந்திய அளவில் ரூ.10,000 கோடி மதிப்புள்ள சரக்குகளும், தமிழ்நாட்டில் ரூ.1,000 முதல் 1,500 கோடி மதிப்புள்ள சரக்குகளும், சேலம் மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள சரக்குகளும் தேக்கம் அடைந்துள்ளன. தமிழ்நாட்டில் இருந்து ஜம்மு- காஷ்மீர், நேபாளம் வரை செல்லும் 1.50 லட்சம் வாகனங்கள் செல்லவில்லை. இந்தியா முழுவதும் 90 விழுக்காடு லாரிகள் இயங்காமல் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அரசு விரைவாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்க வேண்டும்'' என்றார்.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored