செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்!Sponsoredநெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை உட்பட 15 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதன்மூலம் ரெய்டு விவகாரம் தொடரும் என்று சொல்லப்படுகிறது.

அருப்புக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்ததாரராக இருந்த செய்யாத்துரையின்  எஸ்.பி.கே நிறுவனத்தில், ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளிகள் பங்குதாரராக இருந்துள்ளனர். இந்த நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஐந்து வருடங்களுக்கான மிகப்பெரிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த நிறுவனத்தைக் கண்காணித்துவந்த வருமான வரித் துறையினர், கடந்த 16-ம் தேதி அருப்புக்கோட்டை, மதுரை, சென்னையிலுள்ள 50-க்கும் அதிகமான எஸ்.பி.கே நிறுவனங்களில் அதிரடிச் சோதனை நடத்தினார்கள். இதில், 185 கோடி ரூபாய் ரொக்கம், 110 கிலோ தங்கம் மற்றும் வைரங்கள் பிடிபட்டன. கணக்கில் வராத 500 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Sponsored


கடந்த ஐந்து நாள்களாக, அருப்புக்கோட்டையில் செய்யாத்துரை உட்பட அவருடைய மகன்கள் நான்கு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து ஆவணங்களையும் சீலிடப்பட்ட நிலையில் சோதனை மற்றும் விசாரணை முடிந்தது. இந்த நிலையில் செய்யாத்துரை, அவர் மகன் நாகராஜ், அவருடைய பினாமி தீபக் உட்பட 15 பேருக்கு விசாரணையில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதன்மூலம், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored