`தரமணி கட்டட விபத்துக்கு யார் காரணம்?’ - ஆளும்கட்சிக்குள் நடக்கும் மோதல்Sponsoredதரமணி கட்டட விபத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. `கட்டட விபத்தை முன்னிறுத்தி ஆளும்கட்சிக்குள்ளேயே முட்டல் மோதல்கள் எழுந்துள்ளன' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

சென்னையை அடுத்த தரமணியில் தனியார் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தன. கடந்த 21.7.2018 இரவு 50 அடி உயரத்தில் ஜெனரேட்டர் அறையின் கட்டுமானப்பணிகள் நடந்தபோது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு குமார் பலியானார். 32 பேர் படுகாயமடைந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிப் படுகாயம் அடைந்த பீகாரைச் சேர்ந்த ராஜன், இன்று அதிகாலை இறந்தார். கட்டட விபத்துக்குக் காரணமான விருதுநகரைச் சேர்ந்த முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த சிலம்பரசன் ஆகிய இரண்டு பொறியாளர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 

Sponsored


கட்டட விபத்து குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், "அந்தக் கட்டடத்துக்கும் அ.தி.மு.-வில் கோலோச்சும் இரண்டு நபர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. அதில், ஒரு நபர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலிருந்தே அரசியலில் இருக்கிறார். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார். விபத்து நடந்தவுடன், உயர் அதிகாரிகளுக்கு அந்தப் பிரமுகரிடமிருந்து போன் கால் சென்றுள்ளது. அதன் விளைவாக, கவனக்குறைவாகச் செயல்பட்ட இரண்டு பொறியாளர்கள்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த விவகாரத்திலிருந்து தப்பிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

இந்த விபத்து குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிடவும் சிலர் தயாராகி வருகின்றனர். அப்போது அந்த முக்கியப் புள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதேநேரம், எடப்பாடியோடு முரண்டு பிடிக்கும் அந்த மூத்த நிர்வாகியைச் சிக்கவைக்கும் வேலைகளையும் எதிர் அணியினர் செய்து வருகின்றனர். கட்டட விபத்து நடந்தவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் பொன்னையா, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். இதன்பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதையும் கவனித்து வருகிறோம்" என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored