`ஹலோ உங்க கடையில லைட் எரியுது' - வடிவேல் பட பாணியில் சென்னையில் நடந்த கொள்ளை!Sponsoredநடிகர் வடிவேல் பட பாணியில், சென்னையில்  உள்ள எலெக்ட்ரிக் கடையில் கொள்ளை நடந்தது.  கடையின் உரிமையாளர்களுக்கு கொள்ளைகுறித்து போன் அழைப்பு வந்துள்ளது.

சென்னை முகப்பேர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர், நொளம்பூர் பகுதியில் எலெக்ட்ரிக் கடை நடத்திவருகிறார். இவருக்கு, நேற்று நள்ளிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், `ஹலோ, உங்கள் கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. கடைக்குள் லைட் எரியுது. உடனே வந்து பாருங்க' என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதனால், பிரவீன்குமார் கடைக்கு விரைந்துசென்றார். அங்கு லைட் எரிந்துகொண்டிருந்தது. 

Sponsored


கடையிலிருந்த 2,00,000 ரூபாய் மதிப்பிலான எலெக்ட்ரிக் பொருள்கள், 8,000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளைப் போயிருந்தன. இதுகுறித்து போலீஸில் பிரவீன்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.  நள்ளிரவில் பிரவீன்குமாருக்கு வந்த போன் அழைப்புகுறித்து விசாரணை நடந்துவருகிறது. நடிகர் வடிவேல், 'ஹலோ பிரபா ஒயின் ஷாப்பா' என்று போனில் பேசும் சினிமா படக் காட்சியைப் போலவே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored