தமிழக ஆளுநருக்கு புதிய பாதுகாப்பு அதிகாரி!



ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பாதுகாப்பு அதிகாரியாக, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sponsored


தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக, தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட காவல்கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் இவர், தற்போது  ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாள் சுற்றுப்பயணமாகக் கடந்த 20-ம் தேதி திருச்சி சென்றார். புதுக்கோட்டை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர், மாலை திருச்சிக்குத் திரும்பினார். அப்போது, அவரது கார் திருச்சி அருகே விபத்தில் சிக்கியது. அரசுப்பேருந்துமீது மோதியதில் காரின் சில பகுதிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக ஆளுநர் உயிர் தப்பினார். இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored