சாதிச் சான்று கொடுக்காமல் அலைக்கழிக்கப்படும் பார்வையற்ற இளைஞர்கள்! - ஆட்சியரிடம் புகார்Sponsored நாடோடி இனத்தைச் சேர்ந்த பார்வையற்ற சகோதரர்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் கொடுப்பதில், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், இதனால், கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் அலைக்கழிக்கபடுவதாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் தங்கம். இவர் திருவாடானை பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிகத் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். தங்கத்தின் மகன்களான பிரபுதேவா (21), மாதவன் (19) ஆகிய இருவருக்கும் பிறவியிலிருந்து கண்பார்வை கிடையாது. இதனால், இவர்கள் இருவரும் தஞ்சாவூரில் உள்ள பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்து தேர்ச்சியும் பெற்றுள்ளனர். நாடோடிகள் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அங்கு வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழில் பிற்பட்ட வகுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேல்படிப்பு படிக்க விரும்பிய அந்த இளைஞர்கள் இருவருக்கும் நாடோடிகள் இனத்துக்கானச் சாதிச் சான்று பெற்று வந்தால்தான் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. 

Sponsored


இதையடுத்து, திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்காக மனு செய்துள்ளனர். ஆனால், ஏற்கெனவே பயின்ற கல்விச் சான்றிதழில் பிற்பட்ட வகுப்பினர் என இருப்பதால் தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சான்று தர மறுத்துள்ளனர். இதையடுத்து, பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ளபடி பிற்பட்ட வகுப்பினருக்கான சாதிச் சான்றிதழையாவது வழங்க கேட்டும் மறுத்துள்ளனர். இதனால் கண் பார்வை இழந்த இந்த இரு இளைஞர்களும் இன்று மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் உரிய சாதிச் சான்று வழங்க கோரி மனு அளித்தனர். 

Sponsored
Trending Articles

Sponsored