`முதலமைச்சருக்கே தெரியாமல் தமிழகத்தில் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன!’ - திருமாவளவன் காட்டம்Sponsored``மதவாத சக்திகள் தலைதூக்காமல் தடுக்கும் வகையில், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளான தி.மு.க.,  காங்கிரஸ், இடதுசாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதுவே விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு’’ என்று நெல்லையில் திருமாவளவன் தெரிவித்தார்.

கடந்த 1999-ம் ஆண்டு, கூலி உயர்வு கேட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட பதற்றத்தில் அங்கிருந்து ஓடியவர்கள், ஆற்றில் குதித்தனர். அங்கும் போலீஸார் தாக்கியதால், கரை சேர முடியாமல் 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவத்தின் நினைவு தினமான இன்று, தாமிரபரணி ஆற்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

Sponsored


அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுகிறது. பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மையினர்  உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பில்லா நாடுகளின் வரிசையில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதுவே, மோடி அரசின் நான்காண்டுச் சாதனை. ஊழலை ஒழிப்பேன், கருப்புப் பணத்தை மீட்பேன் என்று தெரிவித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, அதில் ஒரு அடிகூட நகரவில்லை. 

Sponsored


தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில், 15-வது இடத்தில் இருக்கிறது. சட்டம்-ஒழுங்கைப் பற்றி சொல்லவே வேண்டாம். பெண்களுக்கு , தலைவர்களுக்குப்  பாதுகாப்பில்லை. தமிழக அரசு சுயமுயற்சியில் சுதந்திரமாக இயங்குவதாகத் தெரியவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பசுமைவழிச் சாலை திட்டம் ஆகியவை முதலமைச்சருக்கே தெரியாமல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சருக்கே தெரியாமல் தமிழகத்தில் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன. 

மதவாத சக்திகள் தலைதூக்காமல் தடுக்க, மதச்சார்பற்ற கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்க அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார். Trending Articles

Sponsored