`காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழை!’ - தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு



Sponsored



சென்னையில்  தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தேனாம்பேட்டை, சூளைமேடு, வளசரவாக்கம், ராயபுரம், வில்லிவாக்கத்தில் மழை பெய்தது. சென்னையில் இன்று மாலை நேரத்தில் இடி மேகங்கள் உருவாகக்கூடும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் முன் அறிவிப்பு செய்திருந்தது. இதேபோல் மதுரை, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தமிழகத்தின் மேலும் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Sponsored


வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடகத்தில் தென்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியாகும். கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ள மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், மழை தீவிரமடைந்ததையடுத்து நீர் திறக்கும் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாகத் தமிழகத்தின் மேட்டூர் அணை தனது முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூரிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 23 - ஜூலை 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Sponsored




Trending Articles

Sponsored