காவிரியில் வெள்ளம்! தற்காலிகமாக மூடப்பட்டது முக்கொம்பு சுற்றுலா மையம்!Sponsoredகாவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திருச்சியில் முக்கியமான சுற்றுலாத்தலமான முக்கொம்பு, இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
 
 
கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையிலிருந்து நாளுக்கு நாள் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதனால், காவிரி நீர் காவிரியின் இரு கரைகளையும் தொட்டவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதையடுத்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை உள்ளிட்ட அணைகள் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
 
தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் காவிரியில் இருந்து நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு மாற்றி விடப்படுகிறது. கடந்த 2 நாள்களாக காவிரி நீர் திறந்துவிடப்படும் தண்ணீர் கூடுதலாக இருப்பதால் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி அதிகாரிகளுடன் காவிரி ஆற்றைப் பார்வையிட்டார். பின்னர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில், மக்கள் குளிக்கத் தடை விதித்ததுடன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
 
 
காவிரியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் திருச்சியின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகமாக இருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், முக்கொம்பு சுற்றுலா பூங்காவில் விளையாடுவதுடன் ஆர்வமிகுதியில் காவிரியில் துள்ளி விளையாட நினைக்கிறார்கள். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கொம்பு சுற்றுலா மையத்தை தற்காலிகமாக மூடுவதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored