ஒவ்வொரு தகவலுக்கும் தனி ரேட்! - களவாடப்படும் மாணவர்களின் சுயவிவரங்கள்?Sponsoredதமிழக பள்ளி மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட விவரங்கள், தனியார் நிறுவனம் மூலமாக விற்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'பட்டியலின மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்வதால், அவர்கள் குறித்த விவரங்களுக்கு மட்டும் அதிக விலை கொடுக்கப்படுகிறது' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது தமிழக அரசின் தேர்வுத்துறை இயக்ககம். இந்த அலுவலகத்தில் மாணவர்களின் அனைத்து விவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில், மாணவர்களின் பெயர், கல்வித் தகுதி, தந்தை பெயர், அவரது வேலை, சாதி, வீட்டு முகவரி, செல்போன் எண்கள், ஆதார் எண்கள் ஆகியவை அடக்கம். இந்தத் தகவல்கள் அனைத்தும், தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கு விற்கப்படுவதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Sponsored


சமூக ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம். ``ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களின் விவரத்தைக் குறிவைத்துத்தான் தனியார் நிறுவனம் ஒன்று, தகவல் திருட்டில் ஈடுபட்டு வருகிறது. ஒரு மாணவர் குறித்த தகவலுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கின்றனர். இவை அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது என்பதுதான் அதிர்ச்சிகரமானது. தகவல்களை வாங்கும் தனியார் நிறுவனம் அதை அனைத்துக் கல்லூரிகளுக்கும் விற்கின்றது. இதையடுத்து, மாணவர்களைத் தொடர்புகொண்டு பேசும் கல்லூரி நிர்வாகங்கள், 'எங்கள் கல்லூரிகளில் சேருங்கள்' என வற்புறுத்துகின்றனர். குறிப்பாக, பட்டியலின மாணவர்களுக்கு அரசு பெரும் சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே, தனியார் கல்லூரிகளில் அவர்கள் சேர்ந்தால் முழுக் கல்விச் செலவையும் அரசே அளித்து விடுகிறது என்பதால், அந்த மாணவர்களின் விவரங்கள் மட்டும் அதிக ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்த மோசடியின் பின்னால் தேர்வுத்துறை ஊழியர்கள் பலருக்கும் தொடர்பிருக்கிறது" என்றார் விரிவாக. 

Sponsored


தேர்வுத்துறையில் நடக்கும் மோசடி குறித்து விளக்கம் பெறுவதற்கு, அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவியைத் தொடர்பு கொண்டோம். 'என்ன விவரம்?' என விசாரித்த அதிகாரி ஒருவர், ' மேடம் மீட்டிங்கில் இருக்கிறார். எப்போது பேசுவார் என உறுதியாகச் சொல்ல முடியாது. நாங்கள் எதையும் விற்பனை செய்யவில்லை. அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக, ஜே.டி சேதுராம வர்மாவிடம் பேசுங்கள்' என்றார். இதையடுத்து, இணை இயக்குநர் சேதுராம வர்மாவைத் தொடர்புகொண்டோம். 'மீட்டிங் எப்போது முடியும் எனத் தெரியாது' என்றதோடு தொடர்பைத் துண்டித்தனர் அவரது அலுவலக ஊழியர்கள்.Trending Articles

Sponsored