`கூட்டணிப் பேச்சுவார்த்தை எப்போது?’ முதல்வர் பழனிசாமி பதில்Sponsoredகாஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கக் குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டார் தமிழக முதல்வர் பழனிசாமி. அப்போது பெண் சிங்கக் குட்டி ஒன்றுக்கு ஜெயா எனப் பெயர் வைத்துவிட்டு பூங்கா வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். 


துணை முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லி பயணத்தில் அரசியல் உண்டா?

``துணை முதல்வரின் தம்பி உடல் நலம் சரியில்லாதபோது தனிவிமானம் மூலம் அனுப்பப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு நன்றி தெரிவிக்க தனிப்பட்ட காரணத்துக்காக அவர் டெல்லி சென்றிருக்கிறார்.” 

Sponsoredஅ.தி.மு.க தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதா?

``நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மே மாதம்தான் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்குக் கிட்டத்தட்ட ஒருவருடம் கால அவகாசம் இருக்கிறது. தேர்தல் பணியை நாங்கள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டோம். மதுரையில் 1,000 பேர் கொண்ட சைக்கிள் பேரணியைத் தொடங்கிவிட்டோம். நாள்தோறும் மக்களைச் சந்தித்து தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லி, அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அன்றைய தினமே எங்களின் பிரசாரம் தொடங்கப்பட்டுவிட்டது.” 

Sponsoredஜெயலலிதா இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறாரே?

``மற்ற மாநிலத்தின் முதல்வர் சொல்லும் கருத்துகள் நமக்குப் பொருந்தாது. ஏனென்றால் நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரையில் மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது. மாநில வளர்ச்சிக்காகத்தான் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அங்கே யாருடனும் கூட்டு கிடையாது. எதிரியும் கிடையாது. மாநிலப் பிரச்னைகளுக்குத்தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். காவிரி நதிநீர் பிரச்னை ஏற்பட்டபோது நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் காவிரி நீரை பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 22 நாள்கள் நாடாளுமன்றமே செயல்பட முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுத்தோம். அப்போது எந்த மாநில முதல்வராவது நமக்கு ஆதரவு கொடுத்தார்களா, அந்தந்த மாநில வளர்ச்சியைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது அ.தி.மு.க ஆதரிக்கவில்லை என்கிறார்கள். தெலுங்கு தேச கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று அமைச்சரவையில் 4 ஆண்டு பங்கு பெற்றிருந்தனர். அப்போது அவர்களுக்குள் என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது.” 


நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டீர்களா?

``கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். மற்ற கட்சிகளும் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.''

புதிய கட்சிகள் வரவால் அ.தி.மு.க பாதிக்கப்படுமா?

``எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த அ.தி.மு.க-வை யாராலும் தமிழகத்தில் வீழ்த்த முடியாது.''Trending Articles

Sponsored