ஸ்பென்சர் அருகே தாய், மகனுக்கு நடந்த துயரம்!Sponsoredசென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் சிக்னல் அருகே தண்ணீர் லாரி மோதியதில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அடுத்த மாதம்17-ம் தேதி தனது மகளின் திருமணத்தையொட்டி, உறவினர்களுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தாய் நிர்மலாவும், மகன் மகேஷூம் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்த மகேஷ் அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் அருகே வந்துகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தின் மீது தண்ணி லாரி மோதியது. இந்த விபத்தில் தாயும், மகனும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது மோதிய தண்ணி லாரி, தனியார் ஹோட்டலுக்குத் தண்ணீர் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

Sponsored


Sponsored


இதையடுத்து லாரி ஓட்டுநர் பாலச்சந்திரன் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது தாயும் மகனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored