பாப்பம்மாளை சமைக்கவிடாமல் தடுத்த 4 பேர் சிக்கினர்!Sponsoredதிருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்துணவு சமையலர் பாப்பம்மாள் மீதான தீண்டாமை விவகாரத்தில், தற்போது 4 பேரை காவல்துறை கைதுசெய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றிவருகிறார், பாப்பம்மாள் என்ற பெண்மணி. இவர், பட்டியிலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அப்பகுதி மாற்று சாதியினர் சிலர், அவரை பள்ளிக்கூடத்தில் சமைக்கக் கூடாது என்று கூறி தடுத்தனர். மேலும், அவரை சாதியின் பெயரால் இழிவான சொற்களில் திட்டி மனதளவில் காயப்படுத்தினர். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இது தொடர்பாக, சமையலர் பாப்பம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, பாப்பம்மாள் மீதான தீண்டாமை வன்கொடுமை விவகாரம் தொடர்பாக 87 பேர்மீது காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், அந்தப் புகாரின் அடிப்படையில் திருமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி, மு.மூர்த்தி, பழனிச்சாமி மற்றும் மா.மூர்த்தி ஆகிய 4 பேரைக் காவல்துறையினர் தற்போது கைதுசெய்திருக்கிறார்கள்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored