சிங்கக்குட்டிக்கு `ஜெயா' எனப் பெயர் வைத்த எடப்பாடி பழனிசாமி!Sponsoredகாஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த உயிரியல் பூங்காவுக்கு ஜெயலலிதா முதல்வராகப் பதவி வகித்தபோது, விலங்குகள் மீது உள்ள ஆர்வத்தால் வனக்குழுத் தலைவராக இருந்துவந்தார். அடிக்கடி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்து செல்வார் ஜெயலலிதா. அதேபோல முதல்வர் பழனிசாமியும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அடிக்கடி வந்து செல்கிறார். 

இன்று காலையில் வண்டலூர் வந்த முதல்வர் பழனிசாமி 27.01.2018 அன்று பிறந்த சிங்கக்குட்டி ஒன்றுக்கு ஜெயா எனப் பெயர் வைத்தார். அதைத் தொடர்ந்து 27 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய புலிகள் அமைவிடத்தைத் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே உள்ள கூண்டுகள் ஒவ்வொன்றிலும் சுமார் 8 புலிகள் இருக்கின்றன. விலங்குகள் அலாதியான இடங்களில் பாதுகாக்க வேண்டும் எனப் பூங்காக்கள் ஆணைய விதிகள் சொல்கின்றன. இதனால் ஒரு கூண்டினுள் 2 புலிகள் இருக்கும் அளவில் அவை தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்காவைத் தொடங்கி வைத்தார். ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. வரும் காலத்தில் சிறுவர் பூங்காவிலும் இலவசமாகச் சிறுவர்களை அனுமதிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகப் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். சறுக்கு மரம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும், குழந்தைகள் வன உயிரினங்களைப் பற்றி பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் கல்வெட்டுகளும் சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

Sponsored


Sponsored


இந்த நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் தமிழ்நாடு பூங்காக்கள் ஆணையம் சார்பாக உயர்மட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் வனவியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பூங்காக்கள் ஆணையத்தின் கீழ் செயல்படும் அமிர்தி சரணாலயம், குருமப்பட்டி சரணாலயம், கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவற்றில் வரும் வருமானத்தைக் கொண்டே மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்திக் கொள்ளலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். Trending Articles

Sponsored