கடலூர் சில்வர் பீச்சில் துர்நாற்றமடிக்கும் குடிநீர்... சுற்றுலாப் பயணிகள் அவதி!Sponsoredடலூர் மாவட்டம், தமிழகத்தில் சுற்றுலாவுக்கு பெயர்பெற்றது. இங்கு, வடலூர் வள்ளலார் நினைவிடம், சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லைக் காளியம்மன் கோயில், விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில்  ஆகிய தலங்கள் உள்ளன. வெலிங்டன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், தேவனாம்பட்டினம் பீச் போன்ற பகுதிகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பவை. இதனால், ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்,  கடலூர் மாவட்டத்துக்கு வருகைதருகிறார்கள். 

தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய பீச்சான சில்வர் பீச்சை பார்க்காமல் சுற்றுலாப் பயணிகள் போக மாட்டார்கள். வார விடுமுறை தினங்களில் கடலூர் மக்களும் இங்கு ஆயிரக்கணக்கில் குவிவார்கள். ஆனால், இந்தக் கடற்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது. பழுப்பு  நிறத்தில் இருக்கும் இந்தத் தண்ணீரை கை கழுவக்கூட பயன்படுத்த முடியாது.

Sponsored


சுகாதாரமற்ற தண்ணீரைத்தான் மக்கள் குடிப்பதற்காக வைத்துள்ளது கடலூர் நகராட்சி . இந்த சின்டெக்ஸ் டேங்குகளில் உள்ள குடிநீரை குடித்த குழந்தைகள் நோய்வாய்ப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தி சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் சுத்தமான குடிநீரை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடலூர் நகராட்சி அதிகாரிகள் செய்வார்களா? 

Sponsored
Trending Articles

Sponsored