`காவிரியைக் காண திரண்ட மக்கள்!’ - திருவிழாக்கோலம் பூண்ட மேட்டூர் அணை



Sponsored



மேட்டூர் அணை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் 16 கண் பாலம் வழியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதைக் காண சேலம், தருமபுரி, ஆத்தூர், ஈரோடு மற்றும் அணையைச் சுற்றியுள்ள பொதுமக்கள் திரண்டனர். இதனால், மேட்டூர் அணைப் பகுதி திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. தங்கமாபுரிபட்டினம் அருகே புதிய பாலத்தில் இருந்து 16 கண் பாலம் வழியாக காரிவி ஆறு சீறிப்பாய்ந்தோடி வரும் அழகைக் கண்டு மக்கள் பரவசம் அடைந்திருக்கிறார்கள்.

அதையடுத்து, அப்பகுதியில் சுண்டல், முருக்கு, பட்டாணி, பொரி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், ஐஸ்கிரீம் போன்ற பல திடீர் கடைகள் உருவாகி இருக்கின்றன. கார் பார்க்கிங் பண்ண முடியாமல், வாகனத்தில் வருபவர்கள் திண்டாடுகிறார்கள். பாதுகாப்புக் கருதி, அணைப் பகுதிகளில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு 73,333 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 16 கண் பாலம் வழியாக 53,000 கன அடியும், அணை மின் நிலையம் வழியாக 22,000 கன அடியும், கிழக்கு, மேற்குக் கால்வாய்மூலம் 800 கன அடி வீதமும், மொத்தம் 75,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. மேட்டூர் முழுவதும் மழைச் சாரலைப் போல காற்று வீசுகிறது.

Sponsored


Sponsored


மேட்டூர் அணையைப் பார்வையிட வந்த சுரேஷ், ''இங்கு நான், என் மனைவி தேவிப்பிரியா, குழந்தை ஷியாமலா ஆகியோர் இளம்பிள்ளையில் இருந்து வந்திருக்கிறோம். கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது, மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்துகொண்டிருக்கிறது, மேட்டூர் அணை நிரம்பிவிட்டது. 18 கண் பாலம் வழியாகத் தண்ணீர் வெளியேறுகிறது என தினந்தோறும்  டி.வி, செய்தித்தாள்களில் செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது.

இதனால், மேட்டூர் அணையைப் பார்க்க வேண்டும் என்று என் மனைவி, குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். தண்ணீர் பயங்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீருக்குத்தான் இவ்வளவு நாள் போராடினார்களா என்று நினைக்கும்போது, ஆனந்தக்கண்ணீர் வருகிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அணையைப் பார்க்கும்போது  கடல்போல இருக்கிறது. அணையில் இருந்து வெளியேறும் நீர், ஆக்ரோஷமாகப் பாய்ந்தோடுகிறது. இந்த நீர் கடலில் கலந்து வீணாகாமல் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.



Trending Articles

Sponsored