தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளி மாணவர்களின் மனதை சிரிக்க வைத்த பயிற்சி முகாம்!Sponsoredதஞ்சாவூரில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புத்தாக்க பயிற்சி என்கிற பெயரில் நடனம், இசைக்கருவிகள் இசைத்தல், நடிப்பு, களிமண்ணால் பொம்மைகள் செய்வது என ஐந்து நாள்கள் பயிற்சி கொடுத்ததோடு அவர்களை அதைச்  செய்யவும் வைத்தனர். இதன் மூலம் அந்த மாணவர்கள் மகிழ்ச்சியின் உலகத்துக்குச் சென்ற முகத்தோடு சேர்ந்து அவர்கள் மனதும் சிரித்ததாக கூறுகிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.

தஞ்சாவூர் மேம்பாலத்தில் உள்ளது பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி. இதில் பார்வை குறைபாடு  மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் என 140 பேருக்கு மேல் படிக்கிறார்கள். தஞ்சாவூர்  மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள்  இந்தப் பள்ளியில் இங்கேயே தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்குக் களி மண் விரல்கள் அமைப்பு மற்றும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் இணைந்து கடந்த வாரத்தில் புத்தாக்க பயிற்சி ஒன்றை அளித்தார்கள். இதில் அனைத்து மாணவர்களையும் பங்கு பெற வைத்ததோடு அவர்களிடம் உள்ள திறமையை அறிந்து அவற்றைச் செய்ய வைத்து அழகு பார்த்தனர் ஆசிரியர்கள்.

Sponsored


Sponsored


இது குறித்து அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம், ``உடலில் எந்தக் குறைபாடும் இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கே மனரீதியாகப் பல பிரச்னைகள் ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். இந்த  மாணவர்களின் நிலையைப் பற்றி வார்த்தைகளில் சொல்ல முடியாது. ஒரு நாள் வகுப்பறையில் வண்ணங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவன் எந்த வண்ணமானாலும் எங்களுக்கு எல்லாமே கறுப்புதானே சார் எனக் கலங்கடித்தான். அவர்களின் உலகம் எப்போதும் வேற மாதிரி இருக்கும். இந்த நிலைமையில் தாய், தந்தையைப் பிரிந்து இருளான அவர்கள் உலகில் வெளிச்சத்தைப் பாய்ச்சுவதற்குப் போராடி வருகிறார்கள். அடிப்படையில் அந்த மாணவர்கள் பல திறமைகளைக் கொண்டவர்கள். எதையுமே முடியாது எனச் சொல்லாமல் செய்து பார்க்கிறேன் சார் என எப்போதும் தன்னம்பிக்கையுடன் சொல்வர்கள். இவ்வளவு பெரிய குறையை அவர்களுக்குக் கொடுத்த ஆண்டவன் மனதுக்குள் தன்னம்பிக்கை என்ற ஒன்றைக் கொடுத்து கொஞ்சம் நல்லதையும் செய்திருக்கிறான்.

இப்படிப்பட்ட  மாணவர்களுக்கு ஐந்து நாள்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது . அதில் மாணவர்களைப்  பல குழுக்களாகப்  பிரித்து இசைக்கருவிகள் இசைத்தல், நடனம், நடிப்பு, களி மண்ணால் பொம்மைகள் செய்தல், ஓவியம் வரைதல், பேப்பரில் கீரிடம் செய்தல், விளையாட்டுப் போட்டி என அனைத்தையும் செய்ய வைத்துப் பயிற்சி கொடுத்தோம். இதில் அவர்களுக்கு எதில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதில் அவர்களை அதிகம் ஈடுபட வைத்தோம். ஒவ்வொருவரிடமும் உள்ள டன் கணக்கிலான திறமைகளைக் கொண்டு அசத்தி அனைவரையும் திக்குமுக்காட வைத்து விட்டார்கள். மாணவன் ஒருவன் இசைக்கருவிகளை வாசித்தான். அப்போது அந்த அரங்கமே ஆடத்  தொடங்கியது அவனது வாசிப்பில். எதையும் பார்க்காத அவர்கள் எண்ணத்தில் உருவானதை வைத்துச்  செய்த பொம்மைகள் அனைத்தும் அற்புதம் . இதேபோல் ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளைப் பல மடங்கு வெளிக்காட்டினார்கள். மனதில் பெரும் குறைகள் அவர்களிடத்தில் இருந்தாலும் எப்போதும் இன்முகத்துடனே எல்லோரையும் எதிர்கொள்வார்கள். இந்தப் பயிற்சியின் மூலம் அவர்களின் முகம் மட்டுமல்ல மனதும் சிரித்தது என்றார்.Trending Articles

Sponsored