திருச்சியில் பள்ளி மாணவி தற்கொலை - போலீஸார் தீவிர விசாரணை!Sponsoredதிருச்சியில் பள்ளி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

திருச்சி கே.கே.நகரை அடுத்துள்ள ஐயப்பன் நகர், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூஜிலின் சில்வியா. இவரின் மகள் ரெக்சி சோபியா, அதே பகுதியில் உள்ள  பிரபல தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

Sponsored


இவரின் தந்தை யூஜிலின் வெளியூரில் இருப்பதால், வீட்டில் இவரின் தாய் சில்வியாவும், மகள் ரெக்சி சோபியா ஆகியோர் மட்டும் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார் ரெக்சி சோபியா. கொஞ்ச நேரம் தனிமையில் இருந்துள்ளார்.  இரவு சுமார் 7 மணி அளவில் வீட்டில் அனைவரும் ஜெபம் செய்துகொண்டிருந்தனர்.

Sponsored


அந்தநேரம், ரெக்சி சோபியா மண்ணெண்ணெய் கேனுடன் வீட்டின் பின்புறம் சென்றவர், யாரும் எதிர்பார்க்காத நிலையில், மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். அடுத்த சில நொடிகளில் ரெக்சி சோபியாவின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து,  வேகமாகப் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ரெக்சி சோபியா உடல் முழுவதும் தீ பரவியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் தகவலறிந்த கே.கே நகர் போலீஸார், அங்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரெக்சி சோபியா உயிரிழந்த காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது. Trending Articles

Sponsored