ஓ.பி.எஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்Sponsoredதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி முன்னதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்தார். புகார் அளிக்கப்பட்டு நீண்ட நாள்கள் ஆகியும் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

Sponsored


முன்னதாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ‘புகார் தெரிவித்து நீண்ட நாள்களாகியும் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன? போன்ற பல கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர். பின்னர் இதற்குத் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி ஜூலை 25-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். பின்னர் கடந்த 23-ம் தேதி அறப்போர் இயக்கம் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் மீது மேலும் ஒரு சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

Sponsored


இந்த இரண்டு வழக்குகளும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தார், அதில், ‘ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்படும்’ எனக் கூறினார். பின்னர் பேசிய நீதிபதி, ‘லஞ்ச ஒழிப்புதுறையின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ் பாரதி இந்த விசாரணை அல்லது நடவடிக்கையில் தொய்வு ஏற்படுவதாக கருதினால் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உத்தரவிட்டார்.Trending Articles

Sponsored