சென்னை-செங்கோட்டை இடையே திங்கள்தோறும் சிறப்புக் கட்டண ரயில்!Sponsoredசென்னை-செங்கோட்டை இடையே ஒவ்வொரு திங்கள்கிழமையிலும் சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயணிகளின் வசதிக்காக ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரையிலும் ஒவ்வொரு திங்கள் கிழமையிலும் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரையிலும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06011) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும். 

Sponsored


அதேபோல், மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் காலை 5.35 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Sponsored


இதனிடையே, நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் நாங்குநேரி இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் 26-ம் தேதி திருச்சி-திருவனந்தபுரம்-திருச்சி இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (22627/22628) திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நெல்லை-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (16192/16191) சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. குமரி மாவட்டம் குளச்சல் தொகுதியின் எம்.எல்.ஏ-வான பிரின்ஸ் இது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ’குமரி மாவட்டத்திலிருந்து ஏராளமான பயணிகள் சென்னைக்குச் சென்று வருகிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலிருந்து தலைநகரான சென்னைக்குப் போதுமான ரயில் சேவை இல்லை என்பது மாவட்ட மக்களின் குறையாக இருக்கிறது. 

நாகர்கோவிலில் இருந்து வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மட்டுமே கடந்த 10 வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். அத்துடன், நெல்லையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நெல்லை பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் பெரும்பாலான நாள்களில் அந்த ரயிலின் பெட்டிகள் காலியாகவே செல்கின்றன. அதனால் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.Trending Articles

Sponsored