பொதுமக்கள் கண்முன்னே நடந்த இரட்டைக்கொலை! பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்Sponsoredசென்னையில், ஓடஓட விரட்டி பிரபல ரவுடியின் தம்பி வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா. இவர்மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் தம்பி உதயராஜ். இவர் மீதும் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அண்ணன் தம்பி இருவரும் ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப்பறந்துவந்தனர். 

Sponsored


இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ரவுடி சூர்யா, போலீஸாரிடம் சரணடைந்தார். தொடர்ந்து அவர், சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், உதயராஜ் மற்றும் அவரின் நண்பர் ஒருவர் என இரண்டு பேர் பைக்கில் கேளம்பாக்கத்திலிருந்து வண்டலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கண்டிகை என்ற இடத்தில் இவர்களின் பைக்கை ஒரு கும்பல் வழிமறித்தது. தொடர்ந்து, உதயராஜ் மற்றும் அவரின் நண்பரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால், உதயராஜும், அவரின் நண்பரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், அவர்களை விடாமல் விரட்டிச்சென்று மர்மக்கும்பல் வெட்டியது. 

Sponsored


இந்தச் சம்பவத்தை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். உதயராஜ், அந்தப் பகுதியில் உள்ள புதருக்குள் பதுங்கினார். இந்தச் சமயத்தில் பொதுமக்கள், மர்மக் கும்பலைச் சேர்ந்தவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். இதனால், மூன்று பைக்கில் வந்த அந்த கும்பல் பைக்கை ஆங்காங்கேயே நிறுத்திவிட்டு தப்பிஓடியது. 

இதையடுத்து, இந்தச் சம்பவம்குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த உதயராஜை போலீஸார் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உதயராஜ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரின் நண்பர் எங்கு சென்றார் என்ற விவரம் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. இதனால் மர்ம கும்பல், அவரை கடத்திச் சென்றுவிட்டதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. உதயராஜின் நண்பருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்ததாக போலீஸாரிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவரை போலீஸார் தேடிவருகின்றனர். தற்போது அவர் உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவர் யார் என்றும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் கூறுகையில், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உதயராஜைக் கொலை செய்தவர்கள் யார் என்று விசாரித்துவருகிறோம். ரவுடி சூர்யாவின் எதிரிகளே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது. கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது'' என்றனர். 
 Trending Articles

Sponsored