அமைச்சரின் சொந்த ஊரில் ஆசிரியர்கள் பற்றாக்குறை - மாணவர்கள் பரிதவிப்பு!Sponsoredஅமைச்சர் பாஸ்கரனின் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

சிவகங்கை மாவட்டம், தமறாக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிவந்த வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள், பணியிடநிரவல் கலந்தாய்வில் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாறுதலாகிப் போய்விட்டனர். இதனால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடங்களைக் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லை. நீண்ட நாள்களாகியும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பள்ளி அமைந்துள்ள இடம், கைத்தறி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரனின் சொந்த ஊராகும். இதே நிலைமைதான் லாடனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் உள்ளது.  

ஆசிரியர்கள் பற்றாக்குறையை கல்வித்துறை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. அமைச்சரின் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே இந்த நிலைமையா? என்று மாணவர்களின் பெற்றோர்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறுகையில், ``மொழிப் பாடத்தை மொழி ஆசிரியர்கள் மட்டுமே எடுக்க வேண்டும். ஐந்து பாடங்களுக்கு, அதற்கான பட்டதாரி ஆசியர்கள் நியமிக்கப்பட வேண்டும்'' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored