கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தன் சுத்தம் குறித்த செயல்விளக்கப் பயிற்சி!Sponsoredகோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற தன்சுத்தம் குறித்த செயல்விளக்கப் பயிற்சி முகாமில், மாணவ மாணவியருக்கு தன்சுத்தம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில், நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான தன்சுத்தம் குறித்த செயல்விளக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்களுக்கு கை கழுவுதல், பல் துலக்குதல், நகம் வெட்டுதல், செருப்பு அணிதல் ஆகியவைகுறித்து விளக்கப்பட்டது.

Sponsored


பின்னர், “சாப்பிடுவதற்கு  முன்பு நன்றாக சோப்பு போட்டு கை கழுவிவிட்டு சாப்பிடுவேன். கழிப்பறை பயன்படுத்திய பின்பும் சோப்பு போட்டு கை கழுவுவேன். தன்சுத்த பழக்கவழக்கங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பேன். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சுகாதாரமான தமிழகத்தை உருவாக்குவேன்' என மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, கை கழுவுதல் பற்றி  விளக்கப்பட்டது. 

Sponsored


இதுகுறித்து ரோட்டரி சுகாதாரப் பயிற்றுநர் முத்துமுருகன் பேசுகையில்,  ”தினமும் காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கச் செல்லும் வரை என்னென்ன சுகாதாரப் பழக்கவழங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், தன்சுத்தம் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. காலையில் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். பல் துலக்கும்போது மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் பல் துலக்க வேண்டும்.  மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்ற வேண்டும்.  

குளித்து முடித்ததும், ஈரம் காயும்படி நன்றாகத் தலை துவட்ட வேண்டும். அத்துடன், குளிர்ச்சிக்காக எண்ணெய் தேய்ப்பதை வழக்கமாக்    கிக்கொள்ள வேண்டும். உணவுப் பொருள்கள் சாப்பிட்ட பிறகு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.  சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குளித்து அரை மணி நேரம் கழித்துதான் சாப்பிட வேண்டும்.   

சாப்பிடும் முன்பும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும் நன்றாக சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். உள்ளங் கைகளில், விரல் இடுக்குகளில், தனித்தனி விரல்களில் என 30 நொடிகள் கைகளில் சோப்பு நுரை இருக்கும்படி கைகழுவ வேண்டும் எனவும், வாரம் ஒருமுறை நக வெட்டியால் கை, கால் நகங்களை வெட்ட வேண்டும் எனவும் விளக்கப்பட்டது' என்றார். சுகாதாரப் பழக்கவழக்கம் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சரியான பதில் கூறிய 15 மாணவ, மாணவியருக்கு நகவெட்டி பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ, மாணவியருக்கும் கை கழுவுதல் குறித்த விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.Trending Articles

Sponsored