காவிரி ஆற்றுக்குள் இறங்கி சாகசங்கள் செய்ய வேண்டாம்..! தஞ்சாவூர் எஸ்.பி வேண்டுகோள்Sponsored'காவிரி ஆற்றுக்குள் இறங்கி சாகசங்கள் செய்ய வேண்டாம்' என்று பொதுமக்களுக்கு ஃபேஸ்புக் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார், தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளார் செந்தில்குமார்.

காவிரி ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டுவருகின்றன. இந்த நிலையில், 'காவிரி ஆறு மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. இதனால் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம். காவல்துறையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் உள்ளனர். கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த நேரத்தில் என்ன உதவி தேவைப்பட்டாலும் எங்களை அணுகலாம் என தஞ்சாவூர் எஸ்.பி செந்தில்குமார் அவரது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தச் செயலை பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.

Sponsored


மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து, பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் நீர் வரத்து அதிகமானதால், வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்டா மாவட்ட பாசனத்துக்காகக் கடந்த வாரம் கல்லணை திறக்கப்பட்டது. இதையடுத்து, கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றைக் காண பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதோடு, மகிழ்ச்சியுடன் ஆற்றின் கரையோரம் கூடியும் வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால், ஆறுகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை செய்வதோடு, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும், இதற்காக மாநில பேரிடர் மேலாண்மைப் பயிற்சிபெற்ற போலீஸார் தஞ்சையிலிருந்து பல குழுக்களாகப் பிரித்து பாதுகாப்புக்கு அனுப்பிவைக்கபட்டனர். அவர்களுக்கு, தஞ்சாவூர் எஸ்.பி அறிவுரை வழங்கியதோடு, விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தினார்.

Sponsored


இதுகுறித்து எஸ்.பி., செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மாநில பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த காவலர்களுக்கு பேரிடர் காலத்தில் பயன்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், மூன்று பிரிவாக கல்லணை ,திருவையாறு , தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் இருப்பதோடு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பிலும் இருப்பார்கள். பொதுமக்கள் யாராவது ஆற்றில் நீச்சல் தெரியாமல் சிக்கிக்கொண்டால், அருகில் உள்ளவர்கள் எண்      100-க்கு தகவல் அளிக்கலாம். மேலும், அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் யாரும் செல்ஃபி, புகைப்படம் எடுக்கக் கூடாது; இளைஞர்கள், சாகச நிகழ்ச்சி என்று டைவ் அடிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில், எஸ்.ஐ., தலைமையில் நான்கு காவலர்கள் இருப்பார்கள். ஆற்றின் கரையோரங்களில் பாதுகாப்பாக இருப்பதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்புத்துறை வீரர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த உள்ளோம் என்றார்.Trending Articles

Sponsored