மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைதுSponsoredகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி அளித்த புகாரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சமீரா (பெயர் மாற்றம்). இவரின் தந்தை குமார். கடந்த சில வருடங்களாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக அந்தப்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து தனியார் மருந்தகத்தில் மருந்து வாங்கிக்கொடுத்து கர்ப்பத்தைக் கலைத்துள்ளார். தந்தையின் துன்புறுத்தலைத் தாங்கமுடியாதவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். சிறுமியின் புகாரையடுத்து போக்ஸோ சட்டத்தின் படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 313, 354, 307, 509, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், தலைமறைவாக இருந்த குமாரை தேடிவந்தனர். இந்நிலையில், புதுநல்லூர் ஜங்ஷன் பகுதியில் குமார் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர்  குமாரை கைது செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored