சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை - 17 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்!Sponsoredசென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 பேர் பலமாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இது தொடர்பாக லிப்ட் ஆப்ரேட்டர், காவலாளி உள்ளிட்ட 17 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்களை வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவமும் அரங்கேறியது. இதையடுத்து குற்றவாளிகள் 17 பேருக்கு மகளிர் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கியது. பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸார் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது காவலர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை மகளிர் நீதிமன்றம், 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதேபோல 17 பேர் தரப்பிலிருந்து இதுவரை ஜாமீன் தாக்கல் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored