தூத்துக்குடி பனிமய அன்னை போராலயத்தின் 436-வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!Sponsoredஉலகப் பிரசித்திபெற்ற, தூத்துக்குடி பனிமய அன்னை பேராலயத்தின் 436-வது ஆண்டு திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. 

திருவிழா தொடங்குவதை முன்னிட்டு, இரண்டு நாள்களுக்கு முன்பு, பாரம்பர்ய நடைமுறைப்படி போர்ச்சுக்கீசிய மொழியில்  திருவிழாவுக்கான அறிக்கை வாசிக்கப்பட்டது. நேற்று மாலை, திருச்சிலுவை சிற்றாலயத்திலிருந்து பனிமய அன்னை ஆலயம் வரை மாதாவின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடிபவனி, ஏழை மக்கள், ஏழை மாணவர்களுக்கான கல்விப் பொருள்கள் மற்றும் காணிக்கைப் பொருள்களை  ஆலயப் பங்கு மக்கள் ஏந்திச் சென்ற பேரணி நடைபெற்றது.

Sponsored


தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆலயத்தின் முன் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. கொடி ஏற்றப்பட்டதும், சமாதானத்தை எண்ணி புறாக்களை மக்கள் பறக்கவிட்டனர். பின்னர், நேர்ச்சைக்காக மக்கள் கொண்டுவந்த பசும்பால், பழங்களை அனைவருக்கும் வழங்கினர். திருவிழாவின் முதல் நாளான இன்று, பனிமய அன்னைக்கு தங்கக் கிரீடம் அணிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா முடிவடையும் வரை இந்தக் கீரீடம் அன்னையின் சொரூபத்தில் இருக்கும். 

Sponsored


இந்த விழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், ஏழை எளியோர் வளம் பெற, மாணவ- மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், படகுத் தொழிலாளர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலி நடைபெறுகிறது. பல ஆலயங்களில் மறையுரை என்பது காலையில் மட்டும்தான் நடக்கும்.

உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம், இந்தப் பனிமயமாதா அன்னை ஆலயம் மட்டும்தான். அதேபோல மற்ற ஆலயங்களில் ஒரே திருப்பலி மட்டும்தான் நடக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் மட்டும்தான் தினமும் 8  திருப்பலிகள் நடக்கின்றன.

கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், பர்தா அணிந்த முஸ்லிம் மக்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி ஜெபிப்பதுதான் கூடுதல் சிறப்பு. 10-ம் நாள் திருவிழாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் பெருவாரியான பூக்களை இந்து மக்கள்தான் வழங்கி வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60 ரகசிய கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் புகார்பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். Trending Articles

Sponsored