விபத்துகளை குறைக்க மதுரை சரக டி.ஐ.ஜி எடுத்த அதிரடி நடவடிக்கை!Sponsoredமதுரை சரகத்தில் 40% விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளதாக மதுரை சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு காவல்துறையின் 58-வது தடகள விளையாட்டுப்போட்டி திருச்சியில் வரும் 27, 28, 29-ம் தேதிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஜோதியை தமிழக டி.ஐ.ஜி டி.கே.ராஜேந்திரன் வழங்கினார். இந்த ஜோதியானது சென்னையிலிருந்து கோவை, மதுரை வழியாக வந்து திருச்சியை அடைகிறது. ஜோதியை தென்மண்டல ஐ.ஜி. சார்பாக மதுரை சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் பெற்றுக்கொண்டு திருச்சிக்கு அனுப்பிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மதுரை சரகத்தைப் பொறுத்தவரை தற்போது 40% விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. விபத்து அதிகமாக நடைபெறும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி தடுக்கப்பட்டுவருகிறது. விபத்து நடைபெறுவதை ஆவணங்களாக தயார் செய்து ஏ.டி.எஸ்.பி தலைமையில் தகவல் அளிக்கப்படுகிறது. இதனால் 40% விபத்தைக் குறைத்துள்ளோம். வரும் காலத்தில் முற்றிலுமாக விபத்துகளை குறைக்க முயற்சி செய்வோம். விபத்துகளைத் தடுக்க பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், வாகன ஓட்டிகள் மத்தியில் அதிகப்படியான விழிப்பு உணர்வுகளையும் தீவிர வாகன தணிக்கை மூலமும் விபத்துகளை தடுக்க எஸ்.பி தலைமையில்  நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored