`எனது ஆயுள்காலம் முழுவதும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது’ - டி.டி.வி.தினகரன்!Sponsored'எனது ஆயுள்காலம் இருக்கும் வரை பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை' என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதுரை சென்றார். அப்போது, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில், ``மக்கள்தான் எங்களை கைதூக்கி விட வேண்டும். வேறு யாராவது உதவி செய்தால், மக்கள் எங்களை நிராகரித்துவிடுவார்கள். எங்களுக்கு எதிராக வரும் கருத்துக்கணிப்புகளை நாங்கள் கண்டுகொள்வதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் லட்சியம் 40; நிச்சயம் 37 கிடைக்கும். அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும்" என்றார்.

Sponsored


அப்போது, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தினகரன், ``எனது ஆயுள்காலம் இருக்கும் வரை அந்தக் கட்சியுடன் சேர வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் மதவாதத்துக்கு இடமில்லை. எங்கள் கொள்கையும், அவர்களது கொள்கையும் ஒத்துப்போகாது. எந்தப் பலன் கருதியும் அவர்களுடன் கூட்டணி சேர மாட்டேன்" என்றார். 

Sponsored


அதேபோல, ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குறித்த கேள்விக்கு, ``இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை செய்தால்தான் சரியாக இருக்கும். ஓ.பி.எஸ் தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்ட விவகாரத்தில், தார்மீக பொறுப்பேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். எடப்பாடி, ஓ.பி.எஸ்ஸை யார் கைகோத்து வைத்தார்களோ அவர்களே தற்போது உண்மை நிலையைப் புரிந்துகொண்டார்கள். ஓ.பி.எஸ் பொய் சொல்வது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று தெரிவித்தார்.Trending Articles

Sponsored