கோவை போலீஸ் கெடுபிடி.. கைவிடப்பட்டது எதிர்க்கட்சிகளின் மாநகராட்சி முற்றுகைப் போராட்டம்!Sponsoredபோலீஸ் கெடுபிடி காரணமாக, கோவை குடிநீர் பராமரிப்பைத் தனியாருக்கு தாரை வார்த்தது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கோவை, மாநகராட்சியின் குடிநீர் பராமரிப்புப் பணியை பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்துக்கு, 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி, கோவை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின் அடிப்படையில், 100 வட்டங்களிலும் தெருமுனை கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குவது, மாநகராட்சி முற்றுகை போராட்டங்கள் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

Sponsored


இதையடுத்து, இந்தப் போராட்டங்களை கைவிட காவல்துறை சார்பில் கேட்டுக்கொண்டனர். போராட்டத்துக்கு அனுமதியையும் மறுத்தனர். ஆனால், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் நின்றன. இதனால், காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்த வாய்மொழி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது,

Sponsored
Trending Articles

Sponsored