`வெளியே வந்து கத்திப் பாருங்கள்’ - விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் அ.தி.மு.க-வினர் அத்துமீறல்!Sponsoredதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கூறுவதற்காக விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது விவசாயிகள் தங்களின் குறைகளைக் கூறும் வண்ணமாக, ``மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கொள்ளிடம் வந்தது. தற்போது கொள்ளிடம் ஆற்றிலிருந்து 49 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இது தேவையில்லை. கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும் நீர் நேரடியாகக் கடலில் கலந்து வீணாகிறது. எனவே, கொள்ளிடத்தில் நீரைக் குறைத்து காவிரியிலும் வெண்ணாற்றிலும் அதிக தண்ணீரை திறந்துவிட வேண்டும். அப்படி திறந்து விட்டால்தான் தஞ்சாவூர், திருவாரூர் கடைமடை பகுதிகளை நீர் வந்தடையும்.

Sponsored


மேட்டூரில் தண்ணீர் திறந்து 10 நாள்களாகியும் திருவாரூர் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. அதிகப்படியான தண்ணீர் வருவதற்கான வழிவகை செய்தால்தான் கடைமடை பகுதிகள் பயன்பெறும் நிலத்தடிநீர் மட்டமும் உயரும்" என வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Sponsored


இதைத் தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்த அ.தி.மு.க-வினர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜிடம் நீங்கள் எப்படி இவர்களுக்கு அனுமதி அளித்தீர்கள் என மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், ``விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வந்து அரசியல் செய்யாதீர்கள்'' எனக் கண்டித்தார். எனவே, விவசாயிகள் பக்கம் திரும்பிய அ.தி.மு.க-வினர், `நீங்கள் கத்துவதற்கான இடம் இது இல்லை; வெளியே வந்து கத்திப்பாருங்கள்' என விவசாயிகளை மிரட்டும் விதமாகவும் விவசாயிகளின் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் விதமாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.Trending Articles

Sponsored