சாமளாபுர சர்ச்சையில் சிக்கிய பாண்டியராஜன் கோவை மாவட்ட எஸ்.பி-யாக நியமனம்!Sponsoredதிருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த, காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் கோவை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த மூர்த்தி, ஈரோடு மாவட்டம், சத்யமங்கலம் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி-யாக நியமிக்கப்படுள்ளார். அவருக்குப் பதிலாக, சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி-யாக இருந்த பாண்டியராஜன் கோவை மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஏற்கெனவே திருப்பூர் ஏ.டி.எஸ்.பி-யாக இருந்தபோது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்தது. சாமளாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட, ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் பாண்டியராஜன் அறைந்த விவகாரம், பேரதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதில், ஈஸ்வரியின் செவித்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரைப் பணியில் இருந்து நீக்கவேண்டுமென கோரிக்கைகள் வலுத்தன. ஆனால், அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்தது தமிழக அரசு. ஏற்கெனவே, எஸ்.பி-யாக பதவு உயர்வு பெற்ற பாண்டியராஜனை, தற்போது கோவை எஸ்.பி-யாக நியமித்திருக்கிறார்கள்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored