தொண்டர்கள் வருகை எதிரொலி... கோபாலபுரத்துக்குச் செல்லும் வழிகள் மூடப்பட்டன!Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயதுமூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின் கூடவே வதந்திகளும் வெகுவாக பரவத் தொடங்கியது. இதனால் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டின் முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

கருணாநிதியின் உடல்நிலையை அறிந்துகொள்வதற்காக பல்வேறு கட்சியின் தலைவர்கள் கோபாலபுரம் வீட்டுக்கு விரைந்தனர். அரசியல் தலைவர்கள் அனைவரும் ``கருணாநிதிக்கு ஒன்றும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார்" என்று சொல்லியும் தொண்டர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணத்தால் வீட்டைச் சுற்றி அதிக அளவிலான காவலர்கள் பாதுகாப்புக்காக போடப்பட்டனர்.

Sponsored


Sponsored


தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரத்தைவிட்டு வெளியேறியதும் தொண்டர்கள் அனைவரையும் கலைந்து செல்லும்படி தி.மு.க கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தினர். ஆனாலும், தொண்டர்கள் அனைவரும் செல்வதாக இல்லை. இதனால் கோபாலபுரம் வீடு பூட்டப்பட்டு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. அப்போதும் தொண்டர்களின் வருகை குறையவில்லை. இந்தநிலையில், அதிக அளவிலான பேரிகார்டுகள் வரவழைக்கப்பட்டு கோபாலபுரத்துக்குள் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தொண்டர்கள் கோபாலபுரத்துக்குள் செல்ல காவலர்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored