உங்கள் கர்ஜனையைக் கேட்கக் காத்திருக்கிறோம் - கருணாநிதிக்காகக் குவியும் ட்வீட்ஸ்!Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் எனப்  பல அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின் கூடவே வதந்திகளும் வெகுவாக பரவத் தொடங்கியது. இதனால் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டின் முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. தொடர்ந்து பல்வேறு  அரசியல் தலைவர்களும் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்துச் செல்கின்றனர்.

Sponsored


இந்நிலையில், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள கருத்தில், ``தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன்”என பதிவிட்டுள்ளார்.

Sponsored


மேலும் பா.ஜ.க தேசியச் செயலர் முரளிதர ராவ் வெளியிட்டுள்ள பதிவில் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரின் அரசியல் அனுபவம் தமிழகத்திலும் தேசத்திலும் பெரிய அளவில் பயணிக்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து, நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``என் அரசியல் தந்தை கருணாநிதி நலமுடன் உள்ளார். தமிழக மக்களுக்காக என்றும் நலமுடன் இருப்பார். அவர் நல்லெண்ண வழிகாட்டி. விரைவில் குணமடைந்து வாருங்கள் அப்பா. உங்கள் கர்ஜனை மிகுந்த குரலைக் கேட்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என ட்வீட் செய்துள்ளார்.Trending Articles

Sponsored